அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகளை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக வி.சுரேஷ், துணைத் தலைவர்களாக பாலமுருகன், பிரீத்தி சஞ்சனா, செயலாளராக அஸ்பயர் கே. சுவாமிநாதன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக காமேஷ், துணைத் தலைவர்களாக ராஜசேகர், சரவணகுமார், செயலாளராக ஜனனி P.சதீஷ்குமார் ஆகியோர் நிகமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக தர்மேஷ்குமார், துணைத்தலைவர்களாக ராதாகிருஷ்ணன், செண்பகராஜ், செயலாளராக சிங்கை ஜி. ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக ராஜராஜசோழன், துணைத் தலைவர்களாக சத்தியமூர்த்தி, மணவை ஸ்ரீதரன் ராவ், செயலாளராக பி.வினுபாலன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக செல்வகுமார், துணைத்தலைவர்களாக கவுரிசங்கர், கவின்ராஜ், செயலாளராக வி.வி.ஆர். ராஜ்சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபொன்று ஒவ்வொரு மண்டலத்திற்கும் துணைச் செயலாளர்கள் மற்றும் பொருளாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அனைத்து நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.