அரசு மருத்துவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலிக்க தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் செந்தில்ராஜை தமிழக அரசு நியமித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அனைத்து மருத்துவர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அரசு மருத்துவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை இரண்டு மாத காலத்தில் நிறைவேற்றி தரப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அரசு மருத்துவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை பரிசீலிக்க தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் செந்தில்ராஜை தமிழக அரசு நியமித்துள்ளது.