ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நியமித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் 106 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் ஆகியோரும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா, கரூர் சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, பென்ஜமின், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், வைகைச் செல்வன், ஏ.கே.செல்வராஜ், ப.மோகன், என்.ஆர்.சிவபதி, முக்கூர் சுப்பிரமணியன், சி.த.செல்லப்பாண்டியன், செ.தாமோதரன், இசக்கி சுப்பையா, எம்.எஸ்.எம்.ஆனந்தன், வி.சரோஜா, வி.எம்.ராஜலெட்சுமி, கே.வி.ராமலிங்கம், கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பி.பாலகிருஷ்ணா ரெட்டி, எஸ்.பி.சண்முகநாதன், வி.சோமசுந்தரம், மாதவரம் வி.மூர்த்தி, பி.வி.ரமணா, எம்.பரஞ்ஜோதி மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் என 106 பேர், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.