தமிழகத்தில், அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை 5 மண்டலங்களாகப் பிரித்து மண்டலச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அஇஅதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை நான்கு மண்டலங்களாக செயல்பட்டு வந்த தகவல் தொழில் நுட்ப பிரிவு, கட்சியின் நிர்வாக வசதிக்காக 5 மண்டலங்களாக பிரிக்கப்படுவதாகவும், பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கி, சென்னை,வேலூர்,கோவை, திருச்சி, மதுரை என 5 மண்டலங்களாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளராக அஸ்பயர் கே.சுவாமிநாதன், வேலூர் மண்டல செயலாளராக எம்.கோவை சத்யன், கோவை மண்டல செயலாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரன், திருச்சி மண்டல செயலாளராக பி.வினுபாலன், மதுரை மண்டல செயலாளராக வி.வி.ஆர்.ராஜ் சத்யன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,. தகவல் தொழில் நுட்ப பிரிவுக்கான மாநில துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.