மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான இடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில், வருகிற 19-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 21ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பு குறிப்பிடுக்கான கட்டணம் 400 ரூபாயாகவும், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version