இரண்டு ஆண்டுகள் பி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள வில்லிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் இந்தக் கலந்தாய்வை நேரடி ஒற்றைச்சாளர முறையில் நடத்த உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள, 2 ஆயிரத்து 40 பி.எட் இடங்களில், 2019-20ம் கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.
கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்க உள்ளது. ஜூலை 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூலை 29 கடைசி நாளாகும்.
பொதுப் பிரிவினருக்கு 500 ரூபாய் விண்ணப்பக் கட்டணமும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு 250 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், www.ladywillingdon.com என்ற இணையதளத்தைப் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.