காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு 48 நாட்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும். ஜூலை மாதம் ஒன்றாம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பொதுமக்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முதியோர் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் இன்னும் அத்திவரதரைத் தரிசிக்காத காரணத்தால் அவர்களின் வசதிக்காகத் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என நீதிபதி ஆதிகேசவலு முன், மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் முறையீடு செய்தார். கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.