பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தூக்குதண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

தேச துரோக வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தண்டனையை எதிர்த்து லாகூர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டில் முஷாரப் பிரதமராக இருந்தபோது அரசியலமைப்பு சட்டத்தை முடக்கி அவசர நிலையை கொண்டு வந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு தேச துரோக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 17ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், முஷாரப் சார்பாக அவரது வழக்கறிஞர் அஸார் சித்திக்கி, லாகூர் நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தீர்ப்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு அவசர கதியில் எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் மீது தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், அவரது நடவடிக்கைகள் தேசத்தின் நலனுக்கு எதிரானதாக நிரூபிக்கப்படவில்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version