அபி நந்தனை விடுதலை செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை பாராட்டிய கல்லூரி விரிவுரையாளரை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் விஜயபுராவில் உள்ள பொறியியல் கல்லூரியில் விரைவுரையாளராக பணியாற்றி வருபவர் சந்தீப். இவர் தனது முகநூல் பக்கத்தில், அபிநந்தனை விடுதலை செய்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் செயலை பாராட்டியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ABVP என்ற மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சந்தீப்பை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. மேலும் அவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அமைப்பினர் நிபந்தனை விதித்ததையடுத்து, போலீசார் மற்றும் மாணவர்கள் முன்பு சந்தீப் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.
தனது கருத்தையும் சந்தீப் முகநூலில் இருந்து உடனடியாக நீக்கினார். சந்தீப் பணியாற்றிய கல்லூரி காங்கிரஸ் அமைச்சர் எம்.பி. பாட்டீலுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.