தொற்று நோய் இல்லாத நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், “அப்போலோ புரோஹெல்த்” திட்டத்தை அப்போல மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தொடங்கி வைத்தார்.
2 கோடிக்கும் அதிகமான சுகாதார சோதனைகளை அடிப்படையாக கொண்டு “அப்போலோ புரோஹெல்த்” திட்டத்தின் செயல்பாடுகளை அப்போலோ மருத்துவர்கள் வடிவமைத்துள்ளனர். இதன் தொடக்க விழாவில் பேசிய அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் பருமன் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி, புதிய முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதே அப்போலோ புரோஹெல்த் திட்டத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி, அப்போலோ புரோஹெல்த் திட்டம் நோய்களை குணப்படுத்தி மக்களின் வாழ்க்கையில் உறுதியான மாற்றங்களை நிகழ்த்தும் என்று கூறினார்.