அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அப்பாச்சி ரகத்தைச் சேர்ந்த எட்டு ஹெலிகாப்டர்கள் இன்று இந்திய விமானப் படையில் முறைப்படி சேர்க்கப்பட உள்ளன.
அமெரிக்காவிடமிருந்து 22 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு 2015ல் ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக, சில ஹெலிகாப்டர்கள் மட்டும், ஜூலையில், இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, பஞ்சாப் மாநிலம், பதான் கோட்டில் உள்ள விமானப் படை தளத்தில், 8 ஹெலிகாப்டர்கள் இன்று, இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்படுகின்றன. இந்த விழாவில், விமானப் படை தளபதி, பி.எஸ்.தனோவா பங்கேற்கிறார். தற்போது, உலகில் உள்ள, அதி நவீன, தாக்குதல் திறன் உடைய ஹெலிகாப்டர்களில், ஏ.எச்., – 64இ என்ற, அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் தான், முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.