ஆந்திர சட்டமன்ற மேலவை கலைப்புக்கான தீர்மானம் நிறைவேற்றம்

3 தலைநகரங்களை அமைக்கும் மசோதாக்கள் மீதான எதிர்ப்பின் காரணமாக ஆந்திர சட்டமன்ற மேலவை கலைப்புக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆந்திர மாநில முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து வருகிறது. 58 உறுப்பினர்கள் கொண்ட அம்மாநில சட்டமன்ற  மேலவையில் அக்கட்சிக்கு 9 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சியான தெலுங்கு தேச கட்சிக்கு 28 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஒப்புதல் கிடைக்காமல் போகும் சூழ்நிலை எழுந்தது. அண்மையில், 3 தலைநகரங்களை அமைக்கும் மசோதாக்கள் நிறைவேறாமல் போனது. இதன் எதிரொலியாக அமைச்சரவை ஒப்புதலுடன் சட்டமன்ற மேலவையை கலைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இந்த கூட்டத்தொடரில் இருந்து தெலுங்கு தேச கட்சி விலகியிருப்பதால், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஆந்திர சட்டமன்ற மேலவை கலைக்கப்படுவது குறித்த தகவல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும். இதனால் காலவரையின்றி சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version