ஆந்திர மாநில சட்டப்பேரை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16ஆம் தேதி துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆந்திர சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 16ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் பி.பி.ஹரிசந்தன் உரையுடன் துவங்கவுள்ளதாகவும். ஆளுநர் உரைக்கு பின்னர் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆந்திர நிதியமைச்சர் புகனா ராஜேந்திரநாத் ரெட்டி தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் கூடி பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.