அசுரன் தெலுங்கு ரீமேக்கில் அனுஷ்கா நடிக்க மறுப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி அசுரன் படம் வெளியானது. இப்படத்தில் தனுஷ் – க்கு மனைவியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். டீஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல் என ஏராளமான நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

சாதி பிரச்சனையை மைய கருத்தாக எடுத்து பேசப்பட்ட இப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஹிந்தி , தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில்தெலுங்கில் ஸ்ரீகாந்த் அட்டலா இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது , ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அவருக்குப் பதிலாக ஸ்ரேயா சரணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version