அந்தோணியார் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதால் பரபரப்பு

நாகை அருகே புனித சூசையப்பர் ஆலயத்தின் அந்தோணியார் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கீழ்வேளூர் பகுதியில் புனித சூசையப்பர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஆலயத்தின் உள்ளே அமைக்கப்பட்டு இருந்த புனித அந்தோனியார் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. அந்தோனியார் சிலையின் கை மற்றும் தலை பகுதிகள் உடைக்கப்பட்டுள்ளதை கண்ட அப்பகுதியினர் புகார் அளித்ததை தொடர்ந்து கீழ்வேளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version