சென்னை தலைமை செயலகத்தில் கிருமி நாசினி தெளிப்புǃ

மத்திய அரசின் வழிக்காட்டுதல் படி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைப்பெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக தளர்வு வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஐம்பது சதவீத அளவில் ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட வழிகாட்டுதலில், அனைத்து அரசு அலுவலகங்களையும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலுக்கு இணங்க, மாதத்தில் 2வது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அரசு அலுவலகங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படும் எனவும் அந்த நாட்களில் அரசு அலுவலகங்கள் இயங்காது எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் இன்று தலைமை செயலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள அனைத்து அலுவலகங்களும் காவல்துறை பாதுகாப்புடன் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.

Exit mobile version