திருவனைக்காவல் கோயிலில் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுப்பு

திருச்சி திருவணைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில், அம்மன் சன்னதி பின்புறம் பழங்கால தங்க நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்தை ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, குழி தோண்டும் போது வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இது குறித்து கோயில் ஊழியர்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில், குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, செம்பு பாத்திரம் கண்டெடுக்கப்பட்டது. அதில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, பல கோடி ரூபாய் மதிப்பிலான 504 தங்க நாணயங்கள் இருந்தன.

தங்க நாணயங்களின் மதிப்பை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. கணக்கீடு பணி முடிந்த பிறகே தங்க நாணயங்களின் மதிப்பு தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version