உதகையில் நடைபெற்ற பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சி

உதகையில் இரண்டாவது சீசனை வரவேற்கும் வகையில் நடைபெற்ற பழங்கால கார்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில், இரண்டாவது சீசனை வரவேற்கும் வகையில், பழங்கால கார்கள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கார்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் 1932 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றுள்ளது. முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற, இந்த கண்காட்சியில் இடம் பெற்ற பழங்கால ஆஸ்டன், ஜாகுவார் உள்ளிட்ட பல்வேறு வகை கார்களை சுற்றுலாப் பயணிகள் மற்றும், உள்ளூர் மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். மேலும், 1945 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட லாரிகளும், கூட்ஸ் வேன் போன்ற வாகனங்களும் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, துவக்கி வைத்த பழங்கால கார்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஆனந்தகிரி மைதானத்தில் காட்சிக்காக மாலை 6 மணி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version