மனிதனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் ஆண்டிபாடி கண்டுபிடிப்பு!!!

மனித உடலில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்கும் ஆண்டிபாடியை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், நெதர்லாந்து உட்ரெக்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் மருந்து நிறுவனம் ஒன்றும் இணைந்து கொரோனா ஆண்டிபாடியை கண்டுபிடித்துள்ளனர். இது மனித உடலில் சார்ஸ் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துவதை தடுக்கும். அதே போன்று கொரோனா வைரஸ் தொற்றையும் தடுக்கும். சோதனைக்காக அவர்கள் சேகரித்து வைத்திருந்த வளர்ப்பு மனித உயிரணுக்களில் ஆய்வு செய்த போது, சார்ஸ் வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டிலும் உள்ள ஒரு ஆண்டிபாடி செல்லை கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்பு கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க, ஒரு முழு மனித ஆன்டிபாடியை உருவாக்குவதின் முதல் கட்டமாக பார்க்கப்படுகிறது. இது முமுவதும் மனித செல்களை வைத்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டிபாடி என்றும் இது மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றும் பல்வேறு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version