3 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி விரோத நடவடிக்கை புகார்

ரத்தின சபாபதி, பிரபு, கலைசெல்வன் ஆகிய எம் எல் ஏக்களுக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டிஸ் கிடைத்த நிலையில், 7 நாட்களுக்கு பதிலளிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்னசபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ கலைச்செல்வன், விருத்தாசலம் எம்.எல்.ஏ பிரபு ஆகியோர் ஏற்கனவே தினகரனின் அமமுக வில் பொறுப்பில் இருப்பதால், அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, சபாநாயகருக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதற்கு விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து 3 எம்.எல்.ஏக்களுக்கும் இன்று நேட்டீஸ் கிடைத்துள்ளது. 185 பக்க நோட்டீசுக்கு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் இன்றிலிருந்து 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டி கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version