எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையின் காரணமாக எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை சாதாரண நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மறு ரத்த பரிசோதனையிலும் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், பிரசவ நேரத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் இருக்க தடுப்பு மருந்துகள் வழங்கப்படுவதாக கூறினார். 8 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் தற்போது நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம் அதிகரித்துள்ளதாக சண்முக சுந்தரம் கூறினார்.