அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை ஒரு கிலோ கோதுமையை விலையில்லாமல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். முழு அடைப்பு காலத்தில் உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்படி உணவு தானியங்களை வரும் நவம்பர் மாதம் வரை விலையில்லாமல் வழங்க ஆணையிட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை, ஒரு கிலோ விலையில்லா கோதுமை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோதுமை பெற விரும்பும் அட்டைதாரர்களுக்கு மட்டும் விநியோகிக்க கடை பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.