பிகில் படத்திலிருந்து வெளியான உருக்கமான பாடல்..ராயப்பனை கொண்டாடும் ரசிகர்கள்

அட்லி இயக்கத்தில் அக்டோபர் 25ம் தேதி வெளியான படம்தான் பிகில்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் யோகி பாபு கதிர் ,விவேக், இந்துஜா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதிலும் முக்கியமாக படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரம் திரையில் சில மணி நேரமே வந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

இந்நிலையில் ராயப்பன் கதாபாத்திரம் கொல்லப்படும்போது பின்னணியில் ஒலிக்கும் உருக்கமான பாடலை தற்போது படக்குழுவினர் வீடியோவாக வெளியிட்டு உள்ளனர்.’காலமே காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய்’ என்று உருக்கமான வரிகளை கொண்ட இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த பாடலை கேட்டால் கல் மனசு கூட கரைந்து விடும், ராயப்பன் இந்த ஆளை கொல்லும்ம் போது நான் அழுதுவிட்டேன் என்று ரசிகர்கள் தங்கள் மனக் குமுறல்களை கமெண்டில் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version