மதுரை, திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொழில் தொடங்கப் போவதாக 33 பேரிடம் இருந்து சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் சுருட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்…
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகில் உள்ள கீழக்குயில்குடியை சேர்ந்தவர் புவனேஷ்… இவர் மருத்துவம் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் விற்பனை செய்யும் டீலராக இருந்து வருகிறார்…
இந்த நிலையில் மதுரை திருநகரில் உள்ள நெல்லையப்பர் தெருவில் வசித்து வந்த ராஜகுரு என்பவரிடம் புதிதாக தொழில் தொடங்கப் போவதாக கூறி ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.95 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், பணத்தை வாங்கிய பின்னர் புரனேஷ் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புவனேஷின் வீட்டில் சுப நிகழ்ச்சி நடப்பதாக ராஜகுருவிற்கு தகவல் கிடைத்தது… இதையடுத்து புவனேஷின் வீட்டிற்கு சென்று அவர் கொடுத்த 95 லட்சம் ரூபாயை ராஜகுரு திரும்ப கேட்டுள்ளார்…
இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இதுகுறித்து அவனியாபுரம் போலீசாரிடம் ராஜகுரு புகார் செய்ததை தொடர்ந்து, புவனேஷை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்….
அப்போது தான், மதுரை, திருவண்ணாமலை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 33 பேரிடம், 30 கோடி ரூபாய்க்கு மேல் புவனேஷ் மோசடி செய்தது தெரியவந்தது. சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வருவது போல ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு விதமாக ஆசை வார்த்தை கூறி புவனேஷ் பணத்தை சுருட்டியதும் அம்பலமானது…. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபர்களும் இருப்பார்கள் என்பதற்கு இந்த பணம் சுருட்டல் சம்பவம் மீண்டும் ஒரு உதாரணமாகி இருக்கிறது.