கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு உதவி செய்த உசைன் ஷெரிப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை படுகொலை செய்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் தங்க, பெங்களூருவை சேர்ந்த உசைன் ஷெரிப், அடைக்கலம் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த, தமிழக கியூ பிரிவு காவல்துறையினர்,சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். கியூ பிரிவு காவல்துறையினர் இதுவரை 10 பேரை கைது செய்துள்ள நிலையில், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 15க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.