சீனாவில் படகில் சிக்கிய நாயை மற்றொரு நாய் காப்பாற்றும் -வைரல் வீடியோ

குவாங்டாங் மாகாணத்தில் உள்ள குய்ங்யுவான் ஆற்றில் சென்ற ஒருவர் தான் வளர்த்த நாய் ஒன்றை படகில் நிறுத்திவிட்டு மறந்தபடி சென்றுவிட்டார். இதனால் பரிதவித்த அந்த குட்டி நாய் கரையேற முடியாமல் கத்தித் தவித்தது.

இதனைக் கண்ட குட்டி நாயின் நண்பனான ராட்வில்லர் வகையைச் சேர்ந்த மற்றொரு நாய் தண்ணீருக்குள் குதித்து குட்டி நாய் இருந்த படகின் கயிற்றைப் பற்றி இழுத்து வந்து கரையில் சேர்த்துள்ளது. அதன் பின்னர் கரையிறங்கிய குட்டி நாய் தனது நண்பனுடன் துள்ளிக்குதித்து ஓடிய காட்சியை இணைத்தில் ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

Exit mobile version