தமிழ் சினிமாவின் காதலித்து திருமணம் செய்த நடிகர்-நடிகைகளில் அஜித்-ஷாலினி இணைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. 2000ம் ஆண்டில் திருமணம் செய்த இவர்களுக்கு 8 ஆண்டுகள் கழித்து அனோஷ்கா என்ற பெண் குழந்தையும், அதனை தொடர்ந்து ஆத்விக் என்ற மகனும் பிறந்தார்கள்.
தன்னை போலவே தன் குடும்பத்தினரையும் அதிகமாக மீடியாவில் வெளிக்காட்டாமல் இருப்பார் அஜித். ஆனால் சில சமயங்களின் இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிக வைரலாக பரவும்.
இந்நிலையில், அனோஷ்கா, ஆத்விக் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் அவர்கள் வீட்டு நாய்குட்டியுடன் செல்ஃபி எடுப்பது போல் அந்த புகைப்படம் உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் ட்விட்டரில் #AadvikAjith, #AnoushkaAjith என்ற ஹேஸ்டேக் சென்னை அளவில் ட்ரெண்டாகியுள்ளது.