நல்லம்பள்ளி கருப்பசாமி கோயிலில் அருள்வாக்கு கூறும் பூசாரிக்கு, பக்தர்கள் 75 கிலோ மிளகாயை அரைத்து அபிஷேகம் செய்தனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள கருப்பசாமி கோயிலில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கருப்பசாமியை வணங்கி பூசாரியிடம் அருள்வாக்கு கேட்டுச்சென்றனர்.
பின்னர் 75 கிலோ மிளகாய்களை அரைத்து பூசாரிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைகள் முடிவடைந்தவுடன் 10 ஆடுகள் வெட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.