பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கல்லூரிகளின் தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை, மாணவர்களும், பெற்றோரும் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற 481 கல்லூரிகளில் அதிகபட்சமாக சேலத்தை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேன்ட்லூம் டெக்னாலஜி கல்லூரியில் பயின்ற 88 புள்ளி 12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேசமயம் 6 கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

Exit mobile version