தமிழ்நாடு சட்டப்பேரவை பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடியது. இதில், கூட்டத்தொடர் வரும் 5ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 3ம் தேதி மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், மருத்துவரும், புற்றுநோய் நிபுணருமான சாந்தா ஆகியோருக்கு, இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 4ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடக்கும் என்றும், இறுதி நாளான 5ம் தேதி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தினமும் வழக்கம்போல் காலை 10 மணிக்கு கூடும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.