பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை நீடிப்பதாக அறிவிப்பு

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், எதற்கெல்லாம் தடை தொடரும் என்பதை தற்போது பார்க்கலாம். அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள், வணிக வளாகங்கள் செயல்பட தடை தொடர்கிறது. நீலகிரி மாவட்டத்துக்கும், கொடைக்கானல், ஏற்காடு ஆகிய அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கும் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தடை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்றும், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்கள், உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்கவும் தடை தொடர்கிறது. அனைத்து வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கலாசார நிகழ்வுகள், மற்றும் ஊர்வலங்களுக்கும் தடை நீடிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version