கேரளாவில் வரலாறு காணாதளவில் பெய்த கனமழையால் அந்த மாநிலம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவை தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 5ஆயிரத்து 700 முகாம்களில் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளப் பாதிப்புகளில் சிக்கியிருந்த பெரும்பாலான மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், மழை குறைந்துள்ளதால், இயல்புநிலை சீரடைந்து வருவதாகவும் மின்சாரம் மற்றும் குடிநீர் விடியோகம் சீரமைக்க பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.