காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஊராட்சிமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், கவிதையால் புகாழாரம் சூட்டினார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியத்தில் உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கு.செல்வராஜ் தலைமை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், கே.ஆர்.லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரன கே.ஆர். லோகநாதன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி கவிதை வாசித்தார். உழவன் மகன் பழனிச்சாமி, முதல்வன் – வேளாண் மண்டலம் நல்கியதால், வேளாண்மை முதல்வன் என புகழ்ந்துரைத்தார். பின்னர், இதுவே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.