அமர்நாத் புனித யாத்திரை குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் !

இந்த ஆண்டிற்கான அமர்நாத் புனித யாத்திரை குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரையை வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடத்த அமர்நாத் கோயில் நிர்வாக கமிட்டி முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு நடத்தப்படுவதாக இருந்த அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. கொரோனா வைரஸ் தொற்றால் காஷ்மீரில் பல்வேறு பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு புனித யாத்திரை செல்பவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி தருவது சாத்தியம் அல்ல என்பதால், யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே, அந்த அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் திரும்ப பெற்றது. மேலும் அமர்நாத் புனித யாத்திரை குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Exit mobile version