தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக ஆவடி அறிவிப்பு: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் நன்றி

மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து ஆவடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நன்றி தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு தேர்தலின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும், 3 ஆண்டுகளில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது என கூறிய அவர், ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோருக்கு, ஆவடி மக்களின் சார்பாக நன்றியினை தெரிவித்தார்.

Exit mobile version