ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட அண்ணா சாலை!

சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக இரண்டாவது நாளான இன்று அண்ணா சாலை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் வாகன போக்குவரத்தை முழுமையாக கட்டுப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், மிக அவசர தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி, சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமே வாகனத்தில் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன போக்குவரத்து பெரும்பாலும் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக அண்ணா சாலை ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், உரிய அனுமதி சீட்டு, அடையாள அட்டை இல்லாத வாகனத்தை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

Exit mobile version