அண்ணாவின் 50வது நினைவு நாள் – சென்னை மெரினாவில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சி

பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு தினத்தையொட்டி பிப்ரவரி 3ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாள் வரும் 3ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி சென்னை மெரினாவில் அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அஞ்சலி நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தமிழ்நாடு மற்றும் அதிமுக அமைப்புகள் செயல்பட்டு வரும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆங்காங்கே அண்ணாவின் சிலை அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version