காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்தது ஒரு குழந்தை. இந்தக் குழந்தைதான் தமிழக மற்றும் இந்திய அரசியலை மாற்றி வைக்கப்போகிறது என்று அன்று யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. மதராஸ் மாகாணத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கு காரணமான குழந்தையும் அதுதான். அந்தக் குழந்தை வேறுயாரும் இல்லை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை அவர்கள்தான். இவரின் ஆசிப்பெற்ற அன்புத் தம்பியாக அன்றைக்கு வலம் வந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆவார். அண்ணா எம்.ஜி.ஆரைத் தன் மனதிற்கு இனிய இதயக்கனி என்றுதான் அழைப்பார்.
அண்ணாவின் பேச்சாற்றல் என்பது அனைவரையும் வியக்க வைக்கக் கூடியது. ஒருமுறை அண்ணா அமெரிக்காவிற்கு சொற்பொழுவு ஒன்றிற்கு செல்லும்போது, அங்கிருந்த அமெரிக்கர் ஒருவர் அண்ணாவின் உயரம் மற்றும் உடையைப் பற்றி கேலி பேசியபடி இருந்தார். பிறகு அண்ணாவைக் கூப்பிட்டு, வாட் இஸ் யுவர் கல்ச்சர் என்று மிகவும் எள்ளலாக கேட்டுள்ளார். சற்றும் அசராத அண்ணா ‘’அக்ரிகல்ச்சர்” என்று அவருக்கே உரிய பாணியில் பதிலளித்து அந்த அமெரிக்கரை வாயடைக்க வைத்துள்ளார். இதுபோல பல சம்பவங்களை தனது பேச்சின்மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார். இந்தி எதிர்ப்புப் போராட்ட காலகட்டத்தின் நாயகனே அண்ணாதுரை தான். மாணவர்களை ஒன்று திரட்டி போராடி தமிழ்மொழியை காத்தார். அவரின் வழியிலேயே புரட்சித் தலைவரும், புரட்சித்தலைவியும், தற்போதைய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடிப்பாடி கே.பழனிசாமி அவர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நவம்பர் ஒன்றாம் தேதியில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடுவற்கு வழிவகை செய்ததே முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்தான்.
சி.என்.அண்ணாதுரை அவர்கள் 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். இந்தியாவில் எந்தத் தலைவருக்கும் இல்லாத அளவிற்கு அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பலகோடி மக்கள் திரண்டனர். இன்று அவரின் நினவைப் போற்றுவோம்.