நுழைவுத்தேர்வில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், எம்.பி.ஏ, எம்.இ உள்ளிட்ட படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டும் பொது நுழைவுத்தேர்வு தனியாக நடத்தப்படும் என அறிவித்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனால் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள், மற்ற பல்கலைக்கழகங்களின் ஆளுகையில் செயல்படும் கலை-அறிவியல் கல்லூரிகளின் உள்ள எம்.பி.ஏ., எம்.இ உள்ளிட்ட படிப்புகளுக்கு தனியாக நுழைவுத்தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ்,
அரசுக்கு சவால்விடும் வகையில் செயல்பட்டு மாணவர்களின் நலனை சீர்குலைக்கும் சுரப்பாவை, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.