இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம், இன்றுடன் தனது 41வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
அண்ணா பல்கலைக் கழகம் சென்னை கிண்டியில் 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக செயல்பட்டு வந்த பல்வேறு கல்லூரிகளை ஒன்றிணைத்து, 1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி, பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என உருவாக்கபட்டது. பின்னர் நான்கு வருடங்கள் கழித்து, அண்ணா பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இங்கு B.e,B.tech, B.Arc, M.E., M.Tech., M.Arc., M.Plan., MCA, M.Sc., MBA உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளை வழங்கி வருகிறது. பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டங்களை உருவாக்குவது, கற்றல் முறைகளை உருவாக்குவது, தேர்வுகளை நடத்துவது, மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற பொறியாளர்கள் உலகம் முழுவதும் பல சாதனைகளை செய்து வருகின்றனர்.