பாஜக அரசைக் கண்டித்து வரும் 30-ம் தேதி முதல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

சமூக செயற்பாட்டாளரான அன்னா ஹசாரே வரும் 30ஆம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளார்.

2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டுள்ள,லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை, கடந்த 5 ஆண்டுகளாக முறைப்படி நிறைவேற்றாத பாஜக அரசைக் கண்டித்து, வரும் 30ஆம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடபோவதாக அன்னாஹசாரே தெரிவித்திருக்கிறார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் உண்ணாவிரதத்தை தனது பூர்வீக கிராமமான மகாராஷ்டிராவில் உள்ள ரலிகன் சித்தியில் இருந்து துவங்கயிருப்பதாக அறிவித்துள்ளார். 

Exit mobile version