அன்னா ஹசாரே பத்ம பூஷன் விருதை திருப்பித் தரப் போவதாக அறிவிப்பு

மத்திய அரசு விரைவில் லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாவிட்டால் தன்னுடைய பத்ம பூஷன் விருதை திருப்பித் தரப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

அன்னா ஹசாரே நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக முந்தைய காங்கிரஸ் அரசு லோக் ஆயுக்தா சட்ட மசோதாவை நிறைவேற்றியது. மகாராஷ்ட்ரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த அமைப்புகள் வழுவிழந்து இருப்பதால் புதிய சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி அன்னா ஹாசாரே உண்ணாவிரத போராட்டத்தை தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் தொடங்கினார். காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் ஆறாவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை திருப்பி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

Exit mobile version