4 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்தில் மீண்டும் அனிருத்

நடிகர் தனுஷின் அடுத்த படமான “பட்டாஸ்” படத்தில்  இசையமைப்பாளர் அனிருத் பாடல் இன்று மாலை வெளியாகிறது.

 ‘3’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இசையமைப்பாளர் அனிருத். அந்த படத்தில் இணைந்த தனுஷ்-அனிருத் கூட்டணி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து   தனுஷ் நடித்த மாரி, வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய  படங்களிலும்,  தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை போன்ற படங்களுக்கும் அனிருத் இசையமைத்திருந்தார். ஆனால் அதன்பின் ஏனோ காரணங்களுக்காக இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. ரசிகர்களும் பலரும் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் கூட ரசிகர்களிடன் கேள்விக்கு பதிலளித்த அனிருத், விரைவில் தனுஷூடன் இணைந்து பணியாற்றுவேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டும் தனுஷ்-அனிருத் கூட்டணி இணைந்துள்ளது.  தனுஷ் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்துள்ளார்.இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா, மெஹிரின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விவேக் மெர்வின் இசையமைப்பில் அனிருத் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இதனால் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் தனுஷ்-அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. பட்டாஸ் படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version