பருவநிலை மாற்றத்தினால் பேரழிவின் விளிம்பில் உலகம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் அச்சம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. சபையின் 74-வது ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பருவநிலை மாற்றத்தினால் அழிவின் தொடக்கத்தில் உலகம் இருப்பதாகவும் ஆனால் உலகத் தலைவர்கள் இது குறித்து கவலைப்படாமல் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். கடந்த 30 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்தமாக உயிரினச் சூழல் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அச்சம் தெரிவித்தார்.
வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை தடுப்பதில் உலகத் தலைவர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.