சிறுமி கிரேட்டா தன்பெர்க்கிற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது: டிரம்ப்

ஐ.நா கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை விமர்சித்த ஸ்வீடன் சிறுமிக்கு அதிபர் டிரம்ப் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்கில், காலநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான கிரேட்டா தன்பெர்க், அதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்தார். மேலும், டிரம்ப்பை சிறுமி கோபத்துடன் பார்த்தது, சமூக வலை தளங்களில் வைரலானது.

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்த டிரம்ப், இந்த சிறுமியை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

Exit mobile version