இந்தியா – அமெரிக்கா இடையே மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்: அதிபர் டிரம்ப் தகவல்

இந்தியா – அமெரிக்கா இடையே மாபெரும் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், வர்த்தகம் குறித்த ஆலோசனைகளிலும் ஈடுபடுகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அடுத்த வாரம் இந்தியா செல்ல உள்ளதாகவும், பிரதமர் மோடியை தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார். இருநாடுகள் இடையே மிகப்பெரும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version