தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களிடம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் காலி பணியிடங்களுக்குகடந்த 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் விண்ணப்பித்த 624 பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உதவி திட்ட இயக்குநர் தண்டபாணி, மருத்துவர் அலுவலர் இளங்கோ மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் கண்காணிப்பில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.