அங்காளம்மன் கோவில் 44 ஆவது ஆண்டு குண்டம் இறங்கும் விழா

பல்லடத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் 44 ஆவது குண்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது

இங்குள்ள அங்காளம்மன் கோவில் கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 44 ஆவது ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 3ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் கிராம சாந்தியுடன் விழா துவங்கியது. இதனை தொடர்ந்து கொடியேற்றம், யாக சாலை பூஜைகள் மற்றும் மகா சிவராத்திரி முகப்பள்ளம் மயான பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

Exit mobile version