ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
நாடு முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தெலங்கானாவில் கடந்த வெள்ளிக்கிழமை இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கிருஷ்ணா, கோதாவரி அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதாவரியின் கிளை ஆறுகளான தாலிபெரு, கின்னரசானி ஆகிய நதிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.