மத்திய அரசின் மீது ஆந்திர முதலமைச்சர் குற்றச்சாட்டு

தனது தலைமையிலான அரசை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய அரசு மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

அமராவதி நகரில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசினார். அப்போது, மாநிலத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இதனால் வரும் காலங்களில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து, அசாதாரண சூழலை உருவாக்கி, அமைதியற்ற சூழலை உருவாக்கலாம் என்ற அச்சம் எழுவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றாமல், ஆந்திராவுக்கு அதிக நெருக்கடி தந்து, அரசை மிரட்டி, தொந்தரவு அளிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version